ஒபாமா இந்தியா வருகை ! வரவேற்க சொல்கிறார் வைகோ !!
அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வருகிறார். இன்றைய உலகமயமாக்களின் ஆண்டவனான அமெரிக்க அதிபரை வரவேற்க அடிமை மன்மோகன் அரசு அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆண்டவனை திருப்திபடுத்தினால்தான் பூசாரி வாழமுடியும், அதனால் ஆண்டவன் ஒபாமா வருகையின்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதில் தீவிர கவனம் எடுத்துவருகிறது பூசாரியின் அரசு. ஒபாமாவின் வருகையின் நோக்கம் என்ன? ஒபாமா வந்து தேவர்களுக்கு எந்தவிதமான் அருளாசி வழங்க போகிறார்?
என இது போன்ற பல கேள்விகள் நம்முள் எழுந்தாலும் இந்த கட்டுரையின் நோக்கம் அதுவல்ல.
கோயிலினுள் பார்ப்பனன் மணியாட்டிக் கொண்டு பூசை புனசுகாரம் செய்யும்போது வாசலில் பண்டாரம் மணியாட்டிக்கொண்டிருக்கிறான் அது யாருமல்ல நம் புரட்சிபுயல் வைகோ அவர்கள்தான். ஒபாமா வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதாக இசுலாமிய அமைப்புகளும், போலி கம்யூனிஸ்டுகளும் அறிவித்திருந்தனர், உடனே நம் புரட்சிபுயலுக்குஇரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. என்னது ஒபாமாவுக்கு எதிர்ப்பா! ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்த ஒபாமாவை வரவேற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என பிச்சு உதறிவிட்டார். சரி ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தில் பிறந்ததால்தான் வைகோ ஒபாமவை வரவேற்க பரவசப்படுகிறார் இல்லையா! ஒருவேளை ஹிலாரி கிளிண்டன் அதிபராக இருந்திருந்தால் வைகோ சிங்கமாக கிளர்ந்தெழுந்திருப்பார் இல்லையா? அதுதான் இல்லை. உலகளவிலே ஒடுக்கபட்டிருக்கும் பெண்சளின் நடுவே ஹிலாரி என்கிற பெண் அமெரிக்க அதிபராகியிருக்கிறார் அவரை வரவேற்பது நமது கடமை என முழங்கியிருப்பார். சரி ஹிலாரியும் இல்லை ஒபாமாவும் இல்லை வேறு யாராவது அமெரிக்க அதிபராகியிருந்தால்? என நீங்கள் கிடுக்கிப்பிடி போடுவது தெரிகிறது. அப்படி வேறு யாராவது வந்திருந்தாலும் பெயரை மட்டும் மாற்றி இதே அறிக்கையை விட்டிருப்பார் வைகோ.
ஏங்க அந்தாளு எதற்காக அமெரிக்க் அதிபரை எதிர்க்க வேண்டும். அவர்தான் ஈழத்துக்காக ராஜபக்சேவை கிழி கிழியயன்று கிழிக்கிறாரே என்று கேட்கலாம். கேள்விகள் நன்றாகத்தான் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தில் பிறந்த ஒபாமா தனது கறுப்பின ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கின்ற வெள்ளையின வெறிக்கு எதிராக குரல் கொடுத்து போராடி அந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக அதிபராக உயர்ந்தாரா? ஒபாமாவிடம் தான் ஒரு ஒடுக்கப்பட்ட நீக்ரோ இனத்தின் பிரதிநிதி என்கின்ற உணர்வுதான் இப்போது இருக்கிறதா என்ன? அப்படி ஒபாமாவை ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக நம்புவதும், நம்பசொல்லுவதும் அயோக்கியத்தனமாகும்.
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் ஒடுக்கபடுகின்றார்கள் என்பது நிதர்சனம், ஆனால் கறுப்பின மக்களின் பிரதிநிதியாக ஒபாமவை சொல்ல முடியாது. இந்தியாவையே எடுத்துக்கொள்ளுங்கள் கே.ஜி. பாலகிருஷ்ணன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர், அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கே நீதியரசனாக இருந்தவர், அவரை தாழ்த்தபட்ட இனத்தில் பிறந்தவர் என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி என சொல்லத்தான் முடியுமா? தாழ்த்தபட்ட மக்களின் உரிமைகளுக்காக கே.ஜி.பாலா என்ன போராடினார்? அவர் ஒடுக்குமுறை அரசின் கருவி. பார்ப்பன பாசிச கருத்துக்களையே தீர்ப்பாக வழங்கியவர். சமூக நீதி போராட்டத்தை ஒரு தலித் நீதிபதியாவதை வைத்தோ, ஒரு முடிதிருத்துபவர் அமைச்சர் ஆவதை வைத்தோ எடை போட முடியும் என்றால் சமூக நீதி போராட்டத்துக்கு என்றைக்கோ கல்லரை கட்டியிருக்கலாம். நூற்றில் ஒருவனுடைய ஒய்யார வாழ்க்கையை வைத்து ஒரு இனத்தின்/சாதியின் முன்னேற்றத்தை கணக்கெடுக்க முடியாது.
என்ன வைகோவை அப்படியே விட்டு விட்டீர்கள் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.
பாலஸ்தீனம், ஆப்கான் மற்றும் இராக் போர்களில் அமெரிக்க இராணுவத்தின் வெறியாட்டங்கள் நாமறிந்ததே. மனித குலத்துக்கெதிரான பேரழிவு வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அமெரிக்க வல்லூருக்கு எதிரான அனைத்து விதமான போராட்டங்களையும் ஆதரிப்பது உலகெங்கும் அடக்குமுறைக்கெதிராக போராடும் மக்களின் கடமை.
இரண்டு முகம்
சூழலோ இப்படியிருக்க வைகோ ஒபாமாவை வரவேற்க ஆராத்தி தட்டோடு வாங்க என அழைப்பு விடுக்கிறார். மறுபக்கமோ ராஜபக்சேவுக்கெதிரான இன அழிப்பு விசாரணைக்குகுரல் கொடுக்கிறார். இதன் மூலம் அமெரிக்காவை வெள்ளையுடை தேவதையாக சித்தரிக்க முயற்சிக்கிறார். அடக்குமுறைக்கெதிராக போராடுபவர்களின் மத்தியில் பிளவு உண்டாக்க முயற்சிக்கிறார்.
இந்தியாவும் கொலைகார ராஜபக்சேவின் அரசும் இணைந்து ஈழத் தமிழர்கள் மேல் நடத்திய இன அழிப்பு போரில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என நம்ப சொல்கிறாரா வைகோ. இராக்கிலும் ஆப்கானிலும் மக்கள் மீது அமெரிக்கா நடத்திவரும் போருக்கும் ஒபாமாவுக்கும் சம்பந்தமில்லை என்கிறாரா? அல்லது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரை ஆதரித்துவிட்டு மறுபக்கம் பாசிச ராஜபக்சேவின் இன அழிப்பு போரை எதிர்ப்பதாக கூறுகிறாரா? தமிழினத்துக்கெதிரான போரைப்பற்றி ராஜபக்சேவிடம் உலக பத்திரிக்கையாளர்கள் கேள்வியயழுப்பிய போது ‘ இராக்கிலும் ஆபகானிலும் அமெரிக்கா இதைத்தானே செய்தது “என்று கொக்கரித்தான் . ஆக ராஜபட்சேவுக்கு முன்னோடியாக இருப்பது அமெரிக்கா.
அமெரிக்காவை ஆதரித்து ராஜபக்சேவை மட்டும் எதிர்ப்போம் என்று வைகோ சொல்வதை எப்படி புரிந்து கொள்வது? அதை வைகோவின் மனசாட்சியும் வர்க்கநலன்களுமே விவரிக்கும்.
நாமும் ஒருநாள் வரவேற்பு கொடுப்போம். ஒபாமாவுக்கு மட்டுமல்ல ராஜபக்சேவுக்கும்,
வைகோவுக்கும் சேர்த்தே. ஆனால் வரவேற்பு அவர்கள் நினைப்பது போல் இருக்காது.
அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள போராடுவோம்
வாழ்த்துக்கள் தோழர்,
தொடர்ச்சியாக எழுதுங்கள்.
Thanks. Keep visiting regularly.
ஒபாமா முந்தைய அமெரிக்க அதிபர்கள் போல அல்ல. முற்றிலும் மாறு பட்டவர்.
அவரது இல்லத்தில நடந்த ஒரு தேநீர் அருந்தும் நிகழ்வில் கறுப்பின போலீஸ் அதிகாரி+பேராசிரியர் வருத்தப் பட்ட நிகழ்ச்சியை வெளியில் தெளிவாக சொல்லி சுமூக தீர்வு கொண்டு வர செய்தவர்.
காந்தியின் கொள்கைகளை வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டும் பாராட்டாமல், காந்தி அறிவுறுத்திய எளிமை வாழ்வை கடை பிடிப்பவர் ஒபாமா. தமது அலுவலகம் அருகில் இருந்த எளிமையான பிச்சா உணவகத்தில் சாதாரண குடிமகன் போல பணம் கட்டி சாப்பிட்டவர்.
எனவே வைகோவின் கருத்தில் எந்த தவறும், குறையும் கிடையாது.
ராம்ஜி !
ஒபாமா பற்றி நீங்கள் கூறும் எளிமைவாதமெல்லாம் நம்மூர் ராகுலுக்கும்
,வைகோவுக்கும்கூட பொருந்தும் கட்டுரையாளரின் மையக்கேள்விகள் இதுதான்
//இந்தியாவும் கொலைகார ராஜபக்சேவின் அரசும் இணைந்து ஈழத் தமிழர்கள் மேல் நடத்திய இன அழிப்பு போரில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என நம்ப சொல்கிறாரா வைகோ. இராக்கிலும் ஆப்கானிலும் மக்கள் மீது அமெரிக்கா நடத்திவரும் போருக்கும் ஒபாமாவுக்கும் சம்பந்தமில்லை என்கிறாரா?//
இதற்கான பதிலை நீங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்,
//காந்தியின் கொள்கைகளை வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டும் பாராட்டாமல், காந்தி அறிவுறுத்திய எளிமை வாழ்வை கடை பிடிப்பவர் ஒபாமா//
நிறைய பேர் மார்தட்டிச் சொல்கிறார்கள் காந்தி கொள்கை, காந்தி கொள்கை என்று
முதலில் காந்தியின் கொள்கை என்னவென்று தாங்கள் விளக்க முடியுமா ராம்ஜி 😆
> ஒபாமா முந்தைய அமெரிக்க அதிபர்கள் போல அல்ல. முற்றிலும் மாறு பட்டவர்.
எந்த விதத்தில்?
> அவரது இல்லத்தில நடந்த ஒரு தேநீர் அருந்தும் நிகழ்வில் கறுப்பின போலீஸ் அதிகாரி+பேராசிரியர் வருத்தப் பட்ட நிகழ்ச்சியை வெளியில் தெளிவாக சொல்லி சுமூக தீர்வு கொண்டு வர செய்தவர்.
முதலில் நடந்த நிகழ்வை முழுமையாக விளக்கினால் தான், ஒபாமா செய்தது சுமுக தீர்வா அல்லது கட்டபஞ்சாயத்தா என்று நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.
இந்த ஒரு நிகழ்வை மட்டுமே வைத்து ஒபாமாவை எடை போட முடியுமென்றால், ஹிட்லரை கூட குறை கூற முடியாது.
> காந்தியின் கொள்கைகளை வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டும் பாராட்டாமல், காந்தி அறிவுறுத்திய எளிமை வாழ்வை கடை பிடிப்பவர் ஒபாமா.
அப்படி என்ன காந்தி எளிமையாக வாழ்ந்துவிட்டார் ? காந்தியின் கோவணம் எளிமையல்ல, வெறும் கபட வேடம்.
> தமது அலுவலகம் அருகில் இருந்த எளிமையான பிச்சா உணவகத்தில் சாதாரண குடிமகன் போல பணம் கட்டி சாப்பிட்டவர்.
பிச்சா உணவகத்தில் சாப்பிட்டார் என்பதெல்லாம், இக்கட்டுரையின் சாரத்தை விட்டு விலகுவதாக இருக்கிறது. விளம்பர படங்களெல்லாம் செல்லுபடியாகாது.
> எனவே வைகோவின் கருத்தில் எந்த தவறும், குறையும் கிடையாது
ஓட்டுப்பொறுக்கி வைகோவிடம் இப்படிப்பட்ட கருத்து இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் கிடையாது. ஆனால், ஈழத்தில் நடந்த இன அழிப்பு போரை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு, உலகெங்கிலும் தனது இலாப வெறிக்காக பேரழிவை கட்டவிழ்த்து விடும் அமெரிக்காவை ஒபாமாவுக்காக ஆதரிப்பதாக கூறும் கப்சா மன்னன் வைகோவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
புஷ்ஷும் கிளிண்டனும் வந்த பொழுது வைகோ வரவேற்க வில்லை ( ஆளும் கட்சியுடன் கூட்டணியில் VAIKO இருந்தும்
எங்கே தோழர் சிவப்புமல்லி
விளக்கம் ப்ளீஸ்
நண்பர் ராம்ஜி, புஷ்ஷும் கிளிண்டனும் வந்த போது அவர்களை வரவேற்கக்கூடிய அதிகாரம் வைகோவுக்கு கிடையாது (ஒபாமாவுக்கும் சேர்த்துதான்). அவர்களின் இந்திய வருகையின் போது ஏதாவது எதிர் அறிக்கை விட்டாரா? விளக்கம் தேவை.
///காந்தியின் கொள்கைகளை வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டும் பாராட்டாமல், காந்தி அறிவுறுத்திய////
ஆப்கானிலும், ஈரக்கிலும் காந்தியின் கொள்கைகளை தான் அமல்படுத்துகிறார்கள், இங்கே தண்டகாரன்யாவில் அமல்படுத்துவது போல்.
இப்படியும் சொல்லலாம்! காந்தியின் கொள்கை என்பது உண்மையில் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர் ஓபாமா…
இப்பதான களையே கட்டுது !
///வைகோ////
போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எல்லா ஓட்டு பொறுக்கிகளும் ஏகாதிபத்தியத்திற்க்கு சொம்பு தூக்கும் போது, வைகோ மட்டும் விதிவிலக்கா என்ன??
அட போங்க தோழர்…
நன்றி தோழர் அக்காகி, உங்கள் வருகை எம்மை செம்மைப்படுத்த உதவும்.
வைகோ சொம்பு தூக்கி என்பதில் ஐயமில்லை. அவரின் ரெட்டை முகத்தை அம்பலப்படுத்துவதே நோக்கம்.
சிவப்புமல்லி,
உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கின்றது, இப்படிப்பட்ட மக்கள் இயல்பாக புரிந்து கொள்ளக்கூடிய எழுத்து நடைதான் இப்போது தேவை, தொடர்ச்சியாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
கலகம்
கலகமே வந்தாச்சா
வாருங்கள் தலிவா
சவிகியமா ,கலகத்துல ஏன் கவுஜயே எழத மாட்றீங்க
தேவை உடனே கலகத்தின் காரமான கவுஜ.